ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு சினிமாவின் சீனியர் காமெடி நடிகரான எம்.எஸ்.நாராயணா இன்று(ஜன.,23ம் தேதி) காலை காலமானார்.. இவரது சிறப்பு என்னவென்றால், ஜூனியர் என்.டி.ஆர் படத்திலும் இருப்பார், பவன் கல்யாண் படத்திலும் இருப்பார்.. நாகர்ஜுனா படத்திலும் இருப்பார்.. அவ்வளவு ஏன் கடந்த வருடங்களில் வெளியான இளம் ஹீரோக்களின் படங்களில் இவர் இல்லாத படங்களே இருக்காது.. கதை எழுதும்போதே இவருக்கென ஒரு கேரக்டரை ஒதுக்கிவிடும் அளவுக்கு திறமையான நகைச்சுவை நடிகர்..
இன்று அவர் காமெடியனாக நடித்துள்ள 'பட்டாஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் காலையில் மரணத்தை தழுவிய நேரத்தில், திரையரங்குகளில் தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருந்தார். கலையை நேசித்த ஒரு நடிகனாக, தான் நடித்த படம் வெளியான நாளில் மரணத்தை தழுவிய எம்.எஸ்.நாராயணாவுக்கு இதைவிட சிறந்த காணிக்கையும் சமர்ப்பணமும் இருக்கமுடியுமோ..?