கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
கேப்டன் சினி கிரியேசன்ஸ் சார்பில் சுதீஷ் தயாரிக்கும் படம் சகாப்தம். விஜயகாந்தின் வாரிசு சண்முகப்பாண்டியன் அறிமுகமாகும் இந்த படத்தை சுரேந்திரன் இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நேகா ஹைங், சுப்ரா ஐயப்பா என இரண்டு கவர்ச்சி குயின்கள் நடித்து வருகின்றனர். மேலும், அலெக்சாண்டர் என்ற படத்தில் விஜயகாந்துக்கு அற்புதமான பாடல்களை கொடுத்த கார்த்திக்ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜயகாந்தும் ஒரு கேரக்டரில் நடித்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளார். மேலும், முதல் படத்திலேயே சண்முகப்பாண்டியனை அதிரடி நாயகனாக காண்பிக்க வேண்டும என்பதற்காக சண்டை காட்சிகள் மட்டுமின்றி அவரை இரண்டு கலக்கல் நாயகிகளுடனும் இணைந்து அதிரடி குத்தாட்டமும் ஆட வைத்திருக்கிறார்களாம்.
அதோடு, படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம்புலி போன்ற காமெடியன்களும் இருப்பதால் காமெடி காட்சிகளிலும் அவரை நடிக்க வைத்து முதல் படத்திலேயே பல அவதாரம் எடுக்க வைத்திருக்கிறாராம் கேப்டன். மேலும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகனான பிரபுவின் பெயருக்கு முன்னால் இளையதிலகம் என்ற பட்டம் இணைந்தது போன்று. திரையுலகினரால் கேப்டன் என்று அன்போடு விஜயகாந்த் அழைக்கப்பட்டு வருவதால், அவரது மகனான சண்முகப்பாண்டியனின் பெயருக்கும் முன்பு இளைய கேப்டன் என்ற பட்டத்தை சூட்டுமாறு சிலர் கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். அதனால் இந்த பட்டத்துடன் முதல் படத்திலேயே சண்முகப்பாண்டியன் என்ட்ரி கொடுப்பார் என்று தெரிகிறது.