ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'அட்டகத்தி' நந்திதா வரிசையில் தமிழுக்கு வந்துள்ள இன்னொரு பெங்களூர் நடிகைதான் ஆருஷி. தமிழில், அழகன் அழகி, வேல்முருகன் போர்வெல்ஸ் போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது அடித்தளம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் அறிமுகமானபோதும் அதன்பிறகு இவருக்கு அங்கு படவாய்ப்புகள் இல்லாததால், தற்போது தமிழ், தெலுங்கில்தான் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது தமிழில் வந்தால் என்றொரு படத்தில் புதுமுக ஹீரோவுடன் நடிக்கிறார் ஆருஷி. இந்த படத்தில் அவருக்கு அழுத்தமான கதாநாயகி வேடமாம். அது மட்டுமின்றி, இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராகிறது. ஒவ்வொரு மொழிகளிலும் அங்கு பிரபலமாக இருக்கும் நடிகர்கள் நடிகைகள் நடித்தபோதும் ஹீரோ ஹீரோயின் மட்டும் மாற்றமில்லையாம்.
அதனால், ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கும் சந்தோசத்தில் இருக்கிறார் ஆருஷி. மேலும், இந்த படம் காதல் கதையில் உருவானபோதும் வழக்கமான காதலாக இல்லாமல் ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகிக்கொண்டிருப்பதால், இந்த படமே தன்னை இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறார். அதனால், மூன்று மொழிகளிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்தபோதும் அந்தந்த மொழி ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்டு அதற்கேற்ற பர்பாமென்ஸ் கொடுக்கும் ஆருஷி, இந்த படத்திற்காக இதுவரையில்லாத அளவுக்கு ஹோம் ஒர்க் செய்து விட்டே கேமரா முன்பு வருகிறாராம்.