உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா |
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல நடிகர்கள் பின்னர் ஹீரோவாக வெற்றி பெற்றதில்லை. ஆனால் சிம்பு ஹீரோவாகவும் வெற்றி பெற்றார். அதோடு, நடிப்பு என்ற வட்டத்திற்குள் மட்டுமே நிற்காமல் இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல முகம் காட்டி வருகிறார். அவர் அறிமுகமான காலகட்டத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார்.
சமீபகாலமாக அவரது மார்க்கெட் மந்தமாகத்தான் உள்ளது. இரண்டு வருடங்களாக அவர் ஹீரோவாக நடித்த எந்த படமும் திரைக்கு வரவில்லை. இந்தநிலையில், அவர் தயாரித்து நடித்து வரும இது நம்ம ஆளு படம் விரைவில் திரைக்கு வரத்தயாராகிக்கொண்டிருக்கிறது. பொங்கல் அன்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை வெளியிடுகிறார்கள்.
இந்த நிலையில், சிம்புவின் படத்தை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக ஏராளமான கல்லூரி பெண்கள் சிம்புவை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு உற்சாகம் கொடுத்து வருகின்றனர். அந்த அளவுக்கு சிம்புவின் நடிப்பை ரசிக்க ஒரு பெரும் இளைஞிகள் கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது. இது சிம்புவுக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுத்துள்ளதாம். அதிலும் சில பெண்கள், எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் எங்களுக்கு என்றென்றும் நீங்கள்தான் இளைய சூப்பர் ஸ்டார் எனறும் சொல்லி சிம்புவுக்கு புதிய எனர்ஜியை கொடுத்துள்ளார்களாம். அதனால், நீண்ட நாளைக்குபிறகு தான் நடித்து திரைக்கு வரும் இது நம்ம ஆளு படம் ஓடும் தியேட்டர்களுக்கு கல்லூரி பெண்களே கூடடம் கூட்டமாக வந்து படத்தை ஓட வைத்து விடுகிறார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார் சிமபு.