ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற வெற்றிப்படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடித்த இது கதிர்வேலன் காதல் படம் சூப்பர் ப்ளாப். ஆனாலும் அப்படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா உடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் நண்பேன்டா. இயக்குனர் எம்.ராஜேஷிடம் அசிஸ்டென்ட் இயக்குனராக பணியாற்றிய ஏ.ஜெகதீஷ் இப்படத்தை இயக்க, உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையிலுள்ள தேவி திரையரங்கில் நடந்தது. நண்பேன்டா படத்தின் டிரைலரை இயக்குனர் எம்.ராஜேஷ் வெளியிட, தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பெற்றுக் கொண்டார். ஆடியோவை நடிகர் சூர்யா வெளியிட, நடிகர் ஆர்யா பெற்றுக் கொண்டார். அதற்கு முன்னதாக விழா நடைபெற்ற தேவி திரையரங்கு அமைந்துள்ள அண்ணாசாலை பகுதியே திமுகவினரால் ரணகளமாகக் கிடந்தது. தன்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் கட்சிக்காரர்களை திரட்டி கெத்து காட்டினார் உதயநிதி. அது அவருக்கே நெகட்டிவ்வாக அமைந்துவிட்டது. திரையுலகப்பிரமுகர்கள் பலரும் உள்ளே நுழையமுடியாமல் அவதிப்பட்டு திரும்பிச்சென்று விட்டனர். தேனப்பன் என்ற தயாரிப்பாளர் உள்ளே நுழைய முற்பட்டபோது சட்டையைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளினர். இப்படிப்பட் களேபரங்கள் வெளியே நடந்து கொண்டிருக்க, உள்ளே விழா நடந்தது.
நண்பேன்டா படத்தின் ஆடியோவை வெளியிட்டு சூர்யா பேசும்போது, இந்த தியேட்டர் வளாகத்திற்கு வந்ததும் திருவிழா கூட்டம் மாதிரி ரசிகர்கள் கூடியிருந்ததை பார்த்தபோது அவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் தயாரித்த இரண்டு படங்களில் நான் நடித்திருக்கிறேன். நான் நடித்த இரண்டு படங்களுக்கு அவர் முதலாளியாக இருந்தார் என்பதால் நான் அவரை பாஸ் என்று தான் அழைப்பேன். வசதி இருந்தாலோ, வாரிசு நடிகராக இருந்தாலோ சினிமாவில் ஜெயிக்க முடியாது. ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதற்கான கடின முயற்சிகளும் இருக்க வேண்டும். அது உதயநிதி ஸ்டாலினிடம் இருந்திருக்கிறது. அதனால் தான் அவர் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் நடித்துள்ள நயன்தாரா அழகாகவும் இருக்கிறார், நல்லா பெர்ஃபார்மென்ஸும் பண்ணியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்கள் வெற்றிப் பெற்றதைப் போல இப்படமும் டபுள் ஹிட் ஆகும் என்றார். இது கதிர்வேலன் காதல் ப்ளாப் என்று தெரியாமலே சூர்யா பேசியதுதான் காமெடி நம்பர் ஒன்.