ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழில் பூலோகம் படத்தில் நடித்த பிறகு புதிய படங்கள் இல்லாமல்தான் கன்னடத்துக்கு சென்று பவர் படத்தில் நடித்தார் த்ரிஷா. ஆனால் அந்த படத்தில் நடித்த நேரம் மறுபடியும் த்ரிஷாவின் கோலிவுட் மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியது. என்னை அறிந்தால், அப்பாடக்கர் படங்களில் கமிட்டானவர் தெலுங்கிலும் கோட்சே என்ற படத்தில் நடிக்கிறார்.
குறிப்பாக, மறுபடியும் விண்ணைத்தாண்டி வருவாயா டைரக்டர் கெளதம்மேனன் தன்னை தாங்கிப்பிடித்துக்கொண்டதோடு, அஜீத்துக்கே ஜோடியாக்கியதால் புதிய உற்சாகத்துடன் அப்படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. அதோடு, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை விடவும் இந்த படத்தில் என்னை இன்னும் அழகாக அழுத்தமாக காண்பித்திருக்கிறார் கெளதம்மேனன் என்று சொல்லும் த்ரிஷா. இது எனக்கு ரொம்ப ஸ்பெசலான படம் என்கிறார்.