ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த 12ந் தேதி வெளியானது. பெரும்பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்றனர். ஆனால் படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு 50 சதவிகிதம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்கள் சென்னை வந்துள்ளனர். நேற்று (டிச 18) அவர்கள் தி.நகரில் உள்ள லிங்கா படத்தின் தலைமை விநியோக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். திருச்சி, தஞ்சை, தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் விநியோகஸ்தர்கள் அதிக அளவில் இருந்தனர்.
"லிங்கா படம் பற்றி பெரியதாக கூறி பெரிய விலைக்கு விற்று எங்களை ஏமாற்றி விட்டனர். எங்களுக்கு நான்கு கோடி முதல் பத்து கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை திருப்பித்தர ரஜினிகாந்த் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே நஷ்டம் என்று குவிந்தவர்கள் உண்மையான விநியோகஸ்தர்களே இல்லை என்றும், படத்தை பற்றி தவறாக செய்தி பரப்பவே இப்படி அவர்கள் செய்ததாகவும் ஒரு தவகல் கூறுகிறது.
நிஜம் என்னவோ...?!