ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமல் நடித்த விக்ரம் படத்தில் நடித்தவர் லிசி. மலையாள நடிகையான இவர் எண்பதுகளில் சில தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக விளங்கிய லிசி, மலையாளப்பட இயக்குநரான பிரியதர்ஷனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து முழுமையாய் விலகினார் லிசி. பிரியதர்ஷனின் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் முழுக்கவனத்தையும் செலுத்தினார். ஏறக்குறைய 28 வருடங்கள் மனம் ஒத்த தம்பதியாக வாழ்ந்த லிசி - பிரியதர்ஷன் ஜோடி சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தனர். சென்னையில் உள்ள ஃபோர் ப்ரேம் பிரிவ்யூ தியேட்டர் மற்றும் டப்பிங் தியேட்டருக்கு உரிமையாளரான லிசி, நட்சத்திர கிரிக்கெட்டில் கொச்சி அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். இவை ஏராளமான கோடிக்கணக்கில் அவருக்கு சொத்துக்கள் உள்ளன. ஆனாலும், பிரியதர்ஷனை பிரிந்த பிறகு மீண்டும் நடிக்க விரும்பி அரிதாரம் பூசத் தயாராகிவிட்டார் லிசி. அவரது முடிவுக்கு லிசியின் தோழிகளான ராதிகா, சுஹாசினி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். விரைவில் தமிழ்ப்படங்களிலும், டிவி சீரியல்களிலும் லிசியை அம்மா வேடங்களில் பார்க்கலாம்.