ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
லிங்கா படத்தில் நடித்த அனுஷ்காவிற்கு ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்த ஆசை மட்டும் நிறைவேறியிருக்கலாம். ஆனால், இந்தப் படம் மூலம் அவருக்கு விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பு இல்லை. அனுஷ்காவிற்கு அளிக்கப்பட்ட ஆடைகளும், அவரைக் காட்டிய விதமும் அவருடைய ரசிகர்களுக்குக் கூடப் பிடிக்க வாய்ப்பில்லை. அனுஷ்காவிற்கு தமிழ்நாட்டிலும் எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ரஜினிகாந்த் மீது மட்டுமே லிங்கா படத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். இரண்டு ஹீரோயின்களான அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மீது அதிக கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால், சோனாக்ஷிக்கு மட்டுமே நடிக்க நல்ல வாய்ப்பு இருந்தது, அதை அவரும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
தன்னை ஒரு சீசன் நடிகைதான் என்று சொல்லிக் கொள்கிறார் அனுஷ்கா. “இந்தத் தலைமுறை நடிகைகள் பலரும் சில சீசனில் கிடைக்கும் படங்கள் போலத்தான் பயன்பட்டு வருகிறார்கள். கொஞ்ச காலத்திற்குத்தான் ஃபார்மில் இருக்க முடிகிறது. அந்தக் கால நடிகைகளான சாவித்ரி, வாணிஸ்ரீ, ஜெய்பிரதா, ஜெயசுதா போன்று தற்போதைய நடிகைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனால், அவர்கள் இன்றும் பேசப்படுகிறார்கள்.
சில சமயங்களில் நாங்கள் நன்றாகத் திறமையை வெளிப்படுத்தினாலும் அவற்றைப் பற்றி யாரும் பேசுவதில்லை. எனக்கு நம்பர் 1 நடிகை என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. படத்தின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து ஒரு நடிகைக்கு அது மாறிக் கொண்டேயிருக்கும். தலைமுறை கடந்தும் பல வருடங்கள் கழித்தும் நான் பேசப்படும் நடிகையாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை,” என அனுஷ்கா தெரிவித்திருக்கிறார்.