அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் | மகளுடன் இணைந்து நடிக்கும் ஷாரூக்கான் | ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' |
ஹீரோக்கள் பின்னணி பாடுவது இப்போது ஒரு பேஷனாகி விட்டது. ரஜினி, கமல் தொடங்கி சமீபகாலமாக, விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் என்று பல ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் பின்னணி பாடி வருகின்றனர். அதோடு, ஸ்ருதிஹாசன், ரம்யா நம்பீசன், லட்சுமிமேனன் போன்ற நடிகைகளும் பின்னணி பாடி வருகின்றனர்.
இப்படி சினிமாவில் பிரபலமானவர்களே பாடுவதால், ரசிகர்கள் மத்தியில் அவர்கள் பாடும் பாடல்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கிறது. அதனால் இதுவரை பின்னணி பாடாமல் இருந்த விஜயசேதுபதியையும் பின்னணி பாடச்சொல்லி சிலர் வற்புறுத்தி வந்தனர். இதுவரை அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் இருந்த அவர், தற்போது தான் தயாரித்து, வசனம் எழுதி நடித்து வரும் ஆரஞ்சு மிட்டாய் படத்தில் முதன்முறையாக பின்னணி பாடுவதற்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்.