ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ்த்திரைப்படத்துறையில் கேரளத்தைச் சேர்ந்த பலரும் பல துறைகளில் இயங்கி வருகின்றனர். வெவ்வேறு துறைகளில் அவர்கள் தொழில் செய்தாலும், ஒருவருக்கொருவர் உதவி செய்ய தவறுவதே இல்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் 'மீகாமன்' திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் தமிழக ஏரியாக்களே எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை. எனவே அப்செட்டான தயாரிப்பாளர் ஜபக், அதன் பிறகு தானே ரிலீஸ் பண்ணிக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு மன ரீதியாக தயாராகிவிட்டார். அவரது பெரும்கவலையாக இருந்தது கேரள விநியோக உரிமைதான்.
யாருமே வாங்க முன் வராததினால், கேரளாவில் மீகாமன் படத்தை வெளியிட முடியாமல் போய்விடுமோ என கவலைப்பட்டார் தயாரிப்பாளர். தான் நடித்த படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா என வருத்தப்பட்ட ஆர்யா, தன்னைப்போலவே கேரளாவில் இருந்து வந்து தமிழ்ப்படங்களை வாங்கி கேரளாவில் வெளியிட்டு வருபவர் ஷிபு.
'தமீன்ஸ் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் ஏற்கெனவே விஜய் நடித்த 'ஜில்லா' படம் உட்பட பல தமிழ் படங்களை கேரளாவில் விநியோகம் செய்தவர். தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர்களில் ஷிபுவும் ஒருவர். அவரை அணுகிய ஆர்யா மீகாமன் படத்தின் கேரள விநியோக உரிமையை வாங்கிக்கொள்ளும்படி கேட்டிருக்கிறார். மறுபேச்சு பேசாமல் வாங்கிவிட்டார் ஷிபு. தயாரிப்பாளரின் பிரச்சனை தீர்ந்தது.