இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
கமல்-பாரதிராஜா-இளையராஜா கூட்டணியில் உருவாகி மெகா ஹிட்டான படம் சிகப்பு ரோஜாக்கள். அதன்பிறகு சைக்கோ கதைகளில் வெளியான பல படங்களில் அந்த படத்தின் டச் இருந்து கொண்டிருக்கிறது. அதோடு படத்தில் இடம்பெற்ற சில டயலாக்குகள் இப்போது வரை மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது சிகப்பு ரோஜாக்கள்-2 படத்தை பாரதிராஜாவின் மகனான மனோஜ், விசாகன் என்ற புதுமுக நடிகரை வைத்து இயக்குகிறார். ஆனால், இந்த படத்தை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இயக்க நினைத்த மனோஜ், மன்மதன் படத்தில் நடித்த சிம்புவை மனதில் கொண்டுதான் அந்த கதையை உருவாக்கினாராம்.
அதோடு, படத்துக்கும் 5 கோடி வரை பட்ஜெட் போட்டிருந்தாராம். ஆனால், அதையடுத்து, படத்தை தயாரிக்க சரியான தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம். அதனால்தான் பல வருடங்களாக அந்த முயற்சியை கிடப்பிலேயே வைத்திருந்தாராம் மனோஜ். ஆனால், இப்போது தனது மனோஜ் கிரியேசன்ஸ் மூலமே படத்தை ஆரம்பித்திருக்கிறார் அவர். மேலும், இப்போது கமிட்டாகியிருக்கும் புதுமுகம் விசாகனும் கிட்டத்தட்ட சிம்பு சாயலில் இருப்பதால் அந்த ஸ்கிரிப்ட் இவருக்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறதாம். அதனால், எந்தவித சலனமும் இன்றி சிகப்பு ரோஜாக்கள்-2 பட வேலைகளில் உற்சாகமாக ஈடுபட்டிருக்கிறார் மனோஜ் பாரதிராஜா.