ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சுந்தர் சி இயக்கத்தில், விஷால் தயாரித்து நடிக்கும் ஆம்பள படத்தில் பெரும் நட்சத்திர கூட்டமே நடிக்கிறது. விஷாலின் அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களில் கிரண் சுந்தர் சி இயக்கிய வின்னர் மற்றும் அன்பே சிவம் படங்களில் கதாநாயகியாக நடித்தவர். கிரணுக்கு தற்போது பட வாய்ப்பு அவ்வளவாக இல்லை என்பதால், அவருக்கு ஓரளவு பணம் கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில் அவருக்கு ஆம்பள படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் சுந்தர் சி.
சப்போர்ட்டிங் கேரக்டர் என்பதால் கிரணுக்கு 10 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு அத்தையாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? ஒரு நாளைக்கு 3 லட்சம் சம்பளம். ஆம்பள படத்துக்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன். ஆக...இந்தப் படத்தில் நடித்ததற்கு 90 லட்சம் சம்பளம் வாங்கி ரம்யா கிருஷ்ணன். மற்றொரு அத்தையாக நடித்த ஐஸ்வர்யாவுக்கு மொத்த படத்துக்கே 5 லட்சம்தான் சம்பளம். ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண் ஆகிய மூவரில் சீ...........னியர் ரம்யா கிருஷ்ணன்தான்.
ஓல்டு இஸ் கோல்டு!