ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கன்னடப் படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் லிங்காவுக்கு யு சர்ட்டிஃபிகேட் கிடைத்துள்ளது. யு சர்ட்டிஃபிகேட் கிடைத்தால், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல கோடி வரிப்பணம் நமக்குக் கிடைக்கும் என்ற சந்தோஷத்தில் லிங்கா படத்தை வாங்க விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் போட்டிபோடுகின்றனராம். தியேட்டர் வசூலில் கிடைக்கும் லாபத்தின் அளவில் சரிபாதி வரி வசூல் மூலம் கிடைக்கும் என்பதால் எப்படியாவது லிங்கா படத்தை வாங்கி வெளியிட நினைக்கிறார்களாம்.
சென்சாரில் யு சர்ட்டிஃபிகேட் கிடைத்த மகிழ்ச்சியோடு, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி லிங்காவை உலகம் முழுக்க வெளியிடும் வேலையில் மும்முரமாகியுள்ளனர். லிங்கா படத்தை உலகம் முழுக்க விநியோகிக்கும் உரிமையை சுமார் 165 கோடிக்கு ஈராஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அந்நிறுவனத்திடமிருந்து லிங்காவை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை சுமார் 80 கோடிக்கு வேந்தர் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. லிங்காவை தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட 600 தியேட்டர்களில் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். லிங்கா தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களில் வெளியாகும் பட்சத்தில் தமிழ்சினிமா வரலாற்றில் தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வெளியான படம் என்ற பெருமை லிங்கா படத்துக்குக் கிடைக்கும்.