ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
'வெயில்' படம் மூலம் இசையைமப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் என்ற பரிச்சயத்துடன் இசையமைப்பாளராக அறிமுகமானாலும், வேறு ஒரு பாணியில் இசையமைப்பாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் ஜி.வி. ரஜினிகாந்த், விஜய், அஜித், விஷால் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் இசையமைத்தவர் சில மாதங்களுக்கு முன் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். அவரது நடிப்பில் 'பென்சில்' என்ற படம்தான் முதன் முதலாக ஆரம்பமானது. கௌதம் மேனனின் உதவியாளரான மணி நாகராஜ் இயக்கத்தில் ஆரம்பமான படம்தான் 'பென்சில்'. கடந்த வருடமே பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் இடையில் சில பல காரணங்களால் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் ஆரம்பமானது.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படமாக 'டார்லிங்' என்ற படம் ஆரம்பமானது. தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பிரேம கதா சித்திரம்' என்ற படத்தின் ரீமேக்தான் 'டார்லிங்'. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். சாம் ஆண்டன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை இன்று வெளியிடப்படுகிறது.
பொதுவாக, ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்குள் நுழைபவர்களுக்கு அவர்களுடைய முதல் படம்தான் மிகவும் ஸ்பெஷலாக அமையும். அந்த விதத்தில் ஜி.வி.க்கு 'பென்சில்' படம் நடிகராக அறிமுகத்தைக் கொடுத்தாலும், முதல் படத்தை முந்திக் கொண்டு அவர் நடிக்க ஆரம்பித்த இரண்டாவது படமான 'டார்லிங்' படத்தின் இசை வெளியாவது ஆச்சரியமான ஒன்றுதான். முதலாவதோ, இரண்டாவதோ முத்திரை பதித்தால் சரி...