ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கோடம்பாக்கம், ஈரம் உள்பட பல படங்களில் நடித்தவர் நந்தா. இவரது நடிப்பில் உருவான படம்தான் கதம் கதம். இந்த படத்தில் இரண்டாது நாயகனாக நட்டி நடராஜ் நடித்தார். ஆனால் இப்படத்தில் நடித்து வந்தபோது, நட்ராஜ் நடித்து வெளியான சதுரங்க வேட்டை படம் வெற்றி பெற்றது. அதையடுத்து, முதன்மை நாயகனாக நடித்து வந்த நந்தா இரண்டாவது நாயகனாக்கப்பட்டு, நடராஜ் முதன்மை நாயகனாக உருவெடுத்தார். அதனால் இப்போது அவரை முன்னிறுத்தியே, அப்படத்தின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. நட்ராஜ், நந்தா இருவருமே போலீஸ் வேடங்களில நடித்துள்ள இந்தபடம் ஆக்சன் மட்டுமின்றி காமெடியும் கலந்து உருவாகியிருக்கிறதாம். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட கதம் கதம் படத்தை வெளியிட சரியான நேரம்பார்த்து வந்தனர்.