ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சதுரங்க வேட்டை, பப்பாளி ஆகிய படங்களில் நடித்தவர் இஷாரா. கேரளத்து பெண்குட்டியான இவர், அந்த படங்கள் கொடுத்த நம்பிக்கை காரணமாக, சென்னையில் வந்து குடியேறி புதிய பட வேட்டையை முடுக்கி விட்டார். அதோடு, தனது முதல்பட ஹீரோவான நட்டி என்கிற நட்ராஜை ரொம்பவே நம்பியிருந்தார். ஆனால், அவரோ, அதற்கடுத்து சில படங்களில் நடித்தபோதும் இஷாராவுக்கு கைகொடுக்கவில்லை. அதனால், சில கம்பெனிகளுக்கு மாறி மாறி ஏறி இறங்கினார் அவர். அப்படி சென்ற இடங்களில் சில டைரக்டர்கள் சான்ஸ் தருவதாக சொன்னதோடு, குறைந்தபட்சம் 10 கிலோவாவது எடையை குறைக்க வேண்டும் என்று கூறினார்களாம்.