சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
கன்னடப் பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துள்ள லிங்கா படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் லிங்கா படத்தின் டீஸர் இம்மாதம் 1ஆம் தேதி யு டியூப்பில் வெளியானது. இந்த டீஸரை இதுவரை 38 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர். ரஜினி படத்தைப் பொறுத்தவரை இதுவரை யு டியூப்பில் அதிகபட்சமாகபார்க்கப்பட்டது கோச்சடையான் படத்தின் டீஸர்தான். அதை அதிகபட்சமாக 48 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த சாதனையை விரைவில் லிங்கா டீஸர் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி லிங்கா படத்தின் இசைவெளியீட்டு விழாவில் லிங்காவின் டிரைலரும் வெளியிடப்பட்டது. அது உடனடியாக யூடியூபிலும் வெளியிடப்பட்டது. தற்போது 5 நாட்களே ஆகியிருக்கும் நிலையில், இதுவரை லிங்கா டிரைலரை 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்திருக்கின்றனர்.
தமிழ்திரையுலைக் கொருத்தவரை இதுவும் ஒரு சாதனைதான் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். 5 நாட்களிலேயே இவ்வளவு பேர் பார்த்திருப்பதால், அனேகமாக கோச்சடையான் சாதனையை இந்த டிரைலரும் முறியடிக்க வாய்ப்புள்ளது என்று நம்புகிறார்கள். ஆனாலும்... தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஐ படத்தின் டீஸர்தான் அதிக பார்வையாளர்களை ஈர்த்து முதலிடத்தில் இருக்கிறது.. இதுவரை அந்த டீஸரை 85 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த சாதனையை லிங்கா முறியடிக்க வாய்ப்பில்லை. அதே நேரம் கோச்சடையான் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.!