தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் |
காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசுவோம் படங்களை இயக்கிய பாலாஜி மோகனின் அடுத்த படம் மாரி. இதில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். காஜல் அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபனும், ராதிகா சரத்குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
சித்தார்த், அமலா பால் நடித்த காதலில் சொதப்புவது எப்படி என்ற வெற்றிப் படத்தை கொடுத்த பாலாஜி மோகனின் வாயை மூடி பேசுவோம் தோல்விப்படமானது. வெற்றி, தோல்வி இரண்டு அனுபவங்களையும் கொண்டு இந்தப் படத்தின் கதையை வடிவமைத்திருக்கிறார். இது தனுஷை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் முழுநீள காமெடி படம் என்கிறது பட வட்டாரம்.