ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். இதில் மறைந்துவிட்ட டூரிங் டாக்கீஸை மையமாக கொண்டு மூன்று கதைகள் பின்னப்பட்டு அந்த மூன்றும் டூரிங் டாக்கீசில் இணைகிற கதை. இந்த மூன்று கதைகளில் ஒரு கதையின் ஹீரோவாக அதாவது 75 வயது இளைஞராக நடிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். அவருக்கு ஜோடியாக சிம்லாவைச் சேர்ந்த ஹேமமாலினி என்ற இளம்பெண் நடிக்கிறார்.
எஸ்.ஏ.சி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் குளுகுளு சிம்லாவிலும் தகதக வெயிலடிக்கும் ராஜஸ்தானிலும் படமாக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.சி தவிர அபி சரவணன், அஷ்வின், கல்கத்தா நடிகை பாப்ரிகோஷ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். அருண்பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். இது எஸ்.ஏ.சியின் கனவு படமாகும்.