ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கமல்ஹாசன் நடிக்கும் படங்களும், கதாபாத்திரங்களும் மட்டும் வித்தியாசமானவை அல்ல..அவருடைய கதாபாத்திரங்களுக்கு வைக்கப்படும் பெயர்களும் வித்தியாசமானவைதான். அதை படத்துக்குப் படம் அவர் சரியாகவே ஃபாலோ செய்து வருவார். “விஸ்வரூபம் - விசம் அகமது காஷ்மீரி, 'மன்மதன் அம்பு' - மேஜர் ராஜமன்னார், 'வேட்டையாடு விளையாடு' - ராகவன், 'அன்பே சிவம்' - நல்லசிவம், தெனாலி சோமன்,” இப்படி பல படங்களின் கதாபாத்திரப் பெயர்கள் கூட அவரது நடிப்பை நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்.
அந்த விதத்தில் தற்போது நடித்து வரும் 'பாபநாசம்' படத்தில் கமல்ஹாசனின் கதாபாத்திரத்திற்கு 'சுயம்பு லிங்கம்' என பெயர் வைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். மலையாள 'த்ரிஷ்யம்' படத்தில் 'ஜார்ஜ் குட்டி' என்ற கிறிஸ்துவக் குடும்பத்தவராக மோகன்லால் நடித்திருந்தார். தமிழில் 'சுயம்பு லிங்கம்' என்ற இந்துக் குடும்பத்தவராக கமல்ஹாசன் கதாபாத்திரத்தை மாற்றி விட்டார்களாம். திருநெல்வேலி வட்டாரப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தமிழுக்காக சில முக்கிய மாற்றங்களைச் செய்திருக்கிறார்களாம்.
கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகரை வைத்து 40 நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருப்பதை மலையாளத் திரையுலகமும், தமிழ்த் திரையுலகமும் மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம். அந்த அளவிற்கு படத்தை மிகச் சரியாக திட்டமிட்டு இயக்குனர் ஜீது ஜோசப் படமாக்கியிருக்கிறார் என அவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.