விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
மஞ்சப்பை படத்திற்கு பிறகு விமல் நடித்திருக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் வருகிற 7ந் தேதி ரிலீசாகிறது. இதில் அவருக்கு காமெடி ஜோடியாக சூரியும், காதல் ஜோடியாக ப்ரியா ஆனந்தும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விமலை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றி இருக்கிறேன் என்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.
அவர் மேலும் கூறியதாவது: ஒரு ஊர்ல ரெண்டு ராஜா கதையில் ஒரு ராஜா விமல் என்றால் இன்னொரு ராஜா சூரி. ராணி - ப்ரியா ஆனந்த். ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் கலந்த பக்கா கமர்ஷியல் படம். விமல் இதுவரை காமெடியாக, அல்லது நடுத்தர குடும்பத்து இளைஞராகத்தான் நடித்துள்ளார். முதன் முறையாக டாப் ஹீரோக்கள் பாணியில் பக்கா கமர்ஷியல் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக சூரி நடித்துள்ளார்.
கதையில் இருவரும் வேலையில்லாத வெட்டி ஆபீசர்கள். போரடித்தால் கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு ரயிலில் ஊர் சுற்ற கிளம்பி விடுவார்கள். அப்படி ஒரு முறை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் ரயிலில் வருகிறார்கள். அந்த ரெயிலில் ப்ரியா ஆனந்தை சந்திக்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையே திசை மாறுகிறது.
விசாகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கமர்ஷியல் வோல்யூவிற்காக இனியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். இந்த பாடலை இமான் இசையில் லட்சுமிமேனன் பாடியுள்ளார். இந்த பாட்டின் மேக்கிங் வீடியோ யூ டியூப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். விமல் சூரி காமினேஷன் தொடர்ந்து வெற்றிகளை கொடுக்கும் என்கிறார் கண்ணன்.