ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ரஜினிதான் தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் என்று பெரும்பாலானோர்கள் சொல்லிக்கொண்டு வரும் நிலையில், லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் தனக்குத்தானே பட்டப்பெயர் சூட்டிக்கொண்டார் சிம்பு. அவரைப்பார்த்து ரஜினிக்கு மருமகனான பிறகு தனுசும் தனது பெயருக்கு முன்னால் இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வைத்துக்கொண்டார்.
ஆனால், ஒரு கட்டத்தில் அதை நீக்கி விட்டார். அதேபோல் இப்போது சிம்புவும் யங் சூப்பர் ஸ்டாரை நீக்கி விட்டார். இந்த நிலையில், கோடம்பாக்கத்தில் அஜீத், விஜய்க்கிடையேதான் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற போட்டி நடந்து கொண்டிருக்கிறது. சில மேடைகளில் அஜீத்தரப்பினர் அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத்தான் என்றும், விஜய்தரப்பினரும் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று சொல்லிக் கொண்டு வருவது தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த தீபாவளி தினத்தில் ரஜினியின் லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதோடு சமூகவலை தளத்திலும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் ரஜினியின் ரசிகர்கள் அதைப்பார்த்து பெரிய சந்தோசத்தில் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தனுசும் லிங்கா ரஜினியின் போஸ்டரைப் பார்த்து அதிக சந்தோசத்தில் இருப்பதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, ஒரே சந்திரன், ஒரே சூரியன் மாதிரி ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்றும் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.