சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
அரிமா நம்பி படத்தில் ஒரு காட்சியில் சரக்கு அடிப்பது போன்று நடித்திருந்தார் ப்ரியாஆனந்த். அதையடுத்து ஒரு தமிழ்நாட்டுப்பெண் இப்படி சரக்கு அடிப்பது போன்று நடிக்கலாமா? என்று கேள்விகள் எழுந்தது.அதையடுத்து, நான் நிஜ சரக்கு அடித்து நடிக்கவில்லை. கூல் டிரிங்ஸ்தான் குடித்தபடி நடித்தேன். மேலும், டைரக்டர் அப்படியொரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று சொல்லும்போது அதை மறுக்க முடியாது என்று அப்போது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ப்ரியாஆனந்த்.
அவரைத் தொடர்ந்து இப்போது காஜல்அகர்வாலும் தெலுங்கில் வெளியான கோவிந்துடு அந்தாரிவாதலே என்ற படத்தில் பாரில் அமர்ந்து சரக்கு அடிப்பது போன்று நடித்து பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் காஜலை தொடர்பு கொண்டு, உங்களது பேவரிட் டிரிங்ஸ் என்னென்ன? என்றெல்லாம் கேட்டு அவரை நச்சரிக்கிறார்களாம்.
இதனால் அந்த காட்சியில்தான் ஏன்தான் நடித்தோம் என்ற பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் காஜல். அதோடு, இப்போதெல்லாம் பெண்கள் பப்களுக்கு சென்று டிரிங்ஸ் சாப்பிடுவது சாதாரணமான விசயமாகி விட்டது என்பதால் அந்த காட்சியை பற்றி விளக்கி டைரக்டர் என்னை நடிக்க சொன்னார். அதனால்தான் நடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்து.
ஆனால், நான் நிஜத்தில் பார்ட்டிகளுக்கு செல்லும்போதுகூட சரக்கு அடித்ததில்லை. அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. அதனால் அந்த வாடையே பிடிக்காது என்னிடம் பேவரிட் டிரிங்ஸ் பற்றி கேட்டால் நான் என்ன பதில சொல்வது என்று பச்சப்புள்ளையாட்டம் பதில் கொடுத்து ரசிகர்களை ஆப் பண்ணி வருகிறார் காஜல்அகர்வால்.