பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் |
அஜித் ரசிகர்களுக்கு தீபாவளிக்குத் தங்கள் அபிமான நடிகரின் படம் வெளியாகவில்லை என்பது ஒரு வருத்தமான விஷயம்தான் என்றாலும், அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் புகைப்படங்கள் வெளிவந்தாலே போதும், அதையே கொண்டாடி மகிழ்வார்கள். இன்று காலை அப்படி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு மளிகைக் கடையின் முன் அஜித் அமர்ந்திருக்கும் அந்த புகைப்படத்தில் அஜித்தின் வித்தியாசமான தோற்றம் கொண்ட புகைப்படங்கள் 'வைரலாக'ப் பரவி வருகின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான போது அஜித் நரைத்த தலையுடன் பங்கேற்ற காட்சிகள்தான் படமாக்கப்பட்டன. தொடர்ந்து 'மங்காத்தா, ஆரம்பம், வீரம்' ஆகிய படங்களில் அஜித் 'சால்ட் அன்ட் பெப்பர்' லுக்கிலேயே நடித்ததால் அவருடைய ரசிகர்கள் எப்போது திரும்பவும் இளமையான அஜித்தைப் பார்ப்போம் என்று ஆவலுடன் இருந்தார்கள். சில தினங்களுக்கு முன் அஜித்தின் இளமையான தோற்றத்துடன் கூடிய புகைப்படங்கள் வெளியாகின. இன்று மற்றொரு வித்தியாசமான புகைப்படம் வெளியாகியுள்ளது. படத்தில் அஜித் ஒரு வேடத்தில் நடிக்கிறாரா அல்லது இரண்டு வேடங்களில் நடிக்கிறாரா என்பதுதான் இப்போது ரசிகர்களிடையே எழுந்துள்ள பேச்சாக இருக்கிறது.