சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
கடந்த 3ந் தேதி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஹாலிவுட் படம் லெப்ட் பிகைண்ட். கோஸ் ரைட்டர் படங்களின் ஹீரோ நிக்கோலஸ் கேக், கேசி தாம்ஸன், கேட் மைக்கேல் முராரி நடித்துள்ளனர். விக் ஆம்ஸ்ட்ராம் இயக்கி உள்ளார். ஜேக் என். கிரீன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜாக் லென்ஸ் இசை அமைத்துள்ளார்.
நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு 257ம் எண் விமானம் பறந்து கொண்டிருக்கிறது. அதனை பைலட் நிக்கோலஸ் ஓட்டிச் செல்கிறார். அப்போது பூமியில் திடீரென பயங்கர கலவரம் வெடிக்கிறது. மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கிறார்கள், கட்டிடங்கள் தரைமட்டமாகின்றன. எங்கும் விமானத்தை தரையிறக்க முடியவில்லை. பூமியில் பைலட்டின் குடும்பம் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது. பூமிக்கு என்ன பிரச்சினை, பைலட் விமானத்தை எப்படி தரையிறக்கினார். தன் குடும்பத்தை காப்பாற்றினாரா என்கிற கதை.
ஆயிரம்கோடி ரூபாய் பட்ஜெட்டில் எண்டர்டெய்ன்மெண்ட் ஒன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தை பிளைட் 257 நியூயார்க் டூ லண்டன் என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். வருகிற 17ந் தேதி இந்தியாவில் ரிலீசாகிறது.