விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
தமிழ் படங்களில் ஏராளமான பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் பிரியன். குறிப்பாக விஜய் ஆண்டனியின் இசையில் அதிகமான பாடல்களை எழுதி வருகிறார்.அதில், விஜய் ஆண்டனி ஹீரோவாக முதன்முதலாக நடித்த நான் படத்தில் பிரியன் எழுதிய மக்கா ஏல மக்கா ஏல -என்ற பாடல் அந்த படம் வெளியான நேரத்தில் சூப்பர் ஹிட்டானது.
ஏ.பி.சி என அனைத்து ஏரியா ரசிகர்களையும் மெய்மறந்து ஆட வைத்து அந்த பாடல் அப்போது சேனல்கள், வானொலி என அனைத்து ஊடகங்களிலும் டாப் 10 பாடல்கள் வரிசையில் நம்பர்-ஒன்னாக சில மாதங்களாக இருந்தது.
அதேபோல், இப்போது அதே விஜய் ஆண்டனி நடித்து இசையமைத்துள்ள சலீம் படத்திலும் மக்கா ஏல மக்கா ஏல பாணியில் மஸ்காரா போட்டு மயக்குறியே என்று இடம்பெற்றிருக்கும் பாடலும் இப்போது சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. பட்டி தொட்டியெல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த பாடலும் டாப்-10 பாடல் வரிசையில் கடந்த சில வாரங்களாகவே முதலிடத்தில் இருந்து வருகிறது.