ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திமிரு படத்தில் நடித்த ஸ்ரேயா ரெட்டி நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து மணந்தார். அதன் பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் ஸ்ரேயா ரெட்டி பற்றி ஒரு தகவல் வெளியானது. மீண்டும் நடிப்பில் முழுமூச்சாக இறங்கப்போகிறார் என்பதே அந்த செய்தி. இதற்கிடையில், தன் அப்பா, அம்மா, தங்கை, அண்ணன், அண்ணி என கூட்டுக்குடும்பமாக இருந்த விஷால், என்ன காரணத்தினாலோ வீட்டை விட்டு வெளியேறி போட்கிளப் பகுதியில் ப்ளாட் ஒன்றில் தனியாக வசிக்க ஆரம்பித்தார். அதோடு, அதுவரை தன் அண்ணனின் பட நிறுவனம் தயாரித்த படங்களில் தொடர்ந்த நடித்து வந்த விஷால், திடீரென தன் பெயரில் விஷால் பிலிம் பேக்டரி என்ற சொந்தப்படநிறுவனத்தைத் தொடங்கினார்.
இதை எல்லாம் வைத்து, விஷாலுக்கும் அவரது அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவுக்கும் பிரச்சனை என்றும், அண்ணன் தம்பி பிரச்சனை வெடிக்க ஸ்ரேயா ரெட்டிதான் காரணம் என்றெல்லாம் திரைப்படத்துறையில் தகவல் பரவியது. இதை எல்லாம் பொய்யாக்குவதுபோல் தற்போது ஒரு விஷயம் நடைபெற்று வருகிறது. டுவிட்டரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஸ்ரேயா ரெட்டி விஷால் தயாரித்த ஜீவா படத்தை புரமோட் பண்ணும் வகையில் தொடர்ந்து ட்வீட் பண்ணி வருகிறார். அது மட்டுமல்ல விஷால் தற்போது நடித்து வரும் பூஜை படம் குறித்தும் புரமோட் பண்ணி வருகிறார்.
ஆக..ஸ்ரேயாவுக்கு, விஷாலுக்கும் யாதொரு பிரச்சனையும் இல்லை என்றுதானே அர்த்தம்!