ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சென்னையில் உள்ள கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனர் கே.வி.மகாதேவ அய்யரின் 90வது பிறந்த நாளையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 30 பேருக்கு சல்யூட் டூ லெஜண்ட் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மயிலாப்பூர் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் சாதனையாளர்கள் கவுரவிக்கப்பட்டார்கள்.
இதில் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்த மெல்லிசை மன்னர் எம.எஸ்.விஸ்வநாதன், 70 படங்களுக்கு மேல் இயக்கிய எஸ்.பி.முத்துராமன், நாடகம் மற்றும் சினிமாவில் 90 வயதை தாண்டியும் நடித்துக் கொண்டிருக்கிற வி.எஸ்.ராகவன் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
விழாவில் நீதிபதிகள் வெ.ராமசுப்பிரமணியன், ராமநாதன், பி.ராஜந்திரன், கே.பி.கே.வாசுகி, தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்-கான ஏற்பாடுகளை கிருஷ்ணா ஸ்வீட் குழுமங்களின் தலைவர் எம்.முரளி செய்திருந்தார்.