மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
வெற்றிமாறனின் உதவியாளர் மணிமாறன் உதயம் என்.எச் 4 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சித்தார்த் நடித்த அந்தப் படம் ஓரளவுக்கு ஓடியது. அதில் திரைக்கதை வசனம் பொறுப்பேற்று தயாரிக்கவும் செய்திருந்தார் வெற்றி மாறன். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதன் பிறகு மணிமாறன் பொறியாளன் படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதினார்.
தற்போது மூன்றாவதாக ஒரு படத்தை தொடங்கியிருக்கிறார். இதனை பிலிம் புரொடக்ஷன் டிப்பார்ட்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அலுவலக பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் ஜெய், வெற்றி மாறன், மணிமாறன், கவிஞர் பிறைசூடன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் தலைப்பு, ஹீரோயின் உள்ளிட்ட எந்த விஷயமும் உறுதி செய்யப்படவில்லை. எல்லாவற்றையும் பின்னர் அறிவிப்போம் என்கிறார்கள்.