ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அர்ஜுன் தற்போது 'ஜெய் ஹிந்த் 2' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நாயகனாகவும் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் கடந்த வருடம் ஜுன் மாதம் ஆரம்பமானது. கல்வி முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு முதலில் கன்னடத் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக இருந்த ஹரிகிருஷ்ணன் இசையமைப்பதாக இருந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அர்ஜுனும், வைரமுத்துவும் கலந்து கொண்ட போது இசையமைப்பாளர் ஹரிகிருஷ்ணாவும் கலந்து கொண்டார். அவர்களிருவருமே ஹரிகிருஷ்ணாவைப் பற்றி பாராட்டிப் பேசினார்கள். அதன் பின் படத்தில் இசையமைப்பாளர் மாற்றப்பட்ட விஷயம் வெளியே தெரியவேயில்லை.
சில தினங்களுக்கு முன் படத்தின் இசை வெளியீடு நடந்த போதுதான் இசையமைப்பாளர் மாற்றப்பட்ட விஷயமே தெரிய வந்தது. அர்ஜுன் ஜென்யா என்பவர்தான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளிவந்த 'ஆட்டோகிராப் ப்ளீஸ்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். ஹரிகிருஷ்ணாவும் கன்னடத் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்தான். அவரும் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர்தான். திரையுலகில் இது போன்ற 'மாற்றல்' சம்பவங்கள் நடைபெறுவது சாதாரணமான விஷயம்தான். ஆனால், படத்தின் பூஜையன்று அவருடைய இசையைப் பற்றி வைரமுத்துப் பாராட்டிப் பேசியதைக் கேட்டவர்களுக்கு அவருடைய திறமையைப் பற்றி நன்றாகப் புரிந்திருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு திறமைசாலி மாற்றப்பட்டதன் பின்னணியில் விவகாரமான விஷயம் ஏதோவொன்று நடந்திருக்கிறது. ஆனால், அதை வெளியில் சொல்லாமலேயே மறைத்துவிட்டார்கள்.