ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய ஹிட் படம் அல்ல. ஆனாலும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதை வைத்துக் கொண்டு நூல் பிடித்து ஏறி இப்போது கைவசம் மூன்று படங்கள் வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
தற்போது அவர் நடித்து வரும் சலீம் படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது. இதில் தெலுங்கு நடிகை அக்ஷரா ஹீரோயின். தன் சாவு நாளை தெரிந்து கொள்ளும் ஒருவன் ஒரு நாள் தான் விரும்பியபடி வாழ நினைக்கிறான். எப்படி வாழ்க்கிறான் என்கிற கதை. பாரதிராஜாவின் உதவியாளர் நிர்மல்குமார் இயக்கி உள்ளார். ஸ்ரீகிரீன் கார்பரேஷன் என்ற நிறுவனத்துடன் இணைந்து பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.
இதற்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் பணிகள் தொடங்கி விட்டது. சுஷ்மா ஹீரோயின். செல்வராகவன் உதவியாளர் ஆனந்தராஜ் இயக்குகிறார். இதையும் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். இதனை தீபாவளியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கும் அடுத்து விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு சைத்தான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது ஹாலிவுட் ஸ்டைலில் தயாராகும் திகில் படம். விஜய் ஆண்டனி மனநல டாக்டராக நடிக்கிறார். மற்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.