விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' |
தமிழ் சினிமாவில் திருட்டு விசிடி என்பதை ஒழிக்க முடியாமல் தமிழ்த் திரையுலகம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒரு படம் வெளிவந்த அன்றே அப்படத்தின் சிடிக்கள் வெளியாகி படத்தின் வசூலை வெகுவாக பாதிக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், அப்படிப்பட்ட திருட்டு விசிடி வியாபாரத்தை முற்றிலுமாக ஒழிக்க இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலே இருந்து வருவதுதான் ஆபத்தான ஒன்று. எந்த புதுப் படம் வெளிவந்தாலும் உடனுக்குடன் சிடிக்கள் வெளியாவது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயமே. அதே சமயம் திரையரங்குகளில் கட்டண உயர்வு, பார்க்கிங் கட்டண கொள்ளை ஆகியவற்றால்தான் சாதாரண, நடுத்தர மக்கள் யாருமே படம் பார்க்க வருவதில்லை என்ற உண்மையையும் பலர் இன்னும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள்.
ஒரு படம் சென்று பார்க்க வேண்டுமானால் குறைந்த பட்சம் 1000 ரூபாய் வரை செலவு ஆவதாக நடுத்தரக் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். சராசரியாக மாதம் 20000 ரூபாய் வருமானம் உள்ள குடும்பத்தில் ஒரு படத்திற்காக யாரும் 1000 ரூபாய் வரை செலவு செய்ய மாட்டார்கள். அதனால் அவர்கள் வெறும் 20 ரூபாயில் கிடைக்கும் திருட்டு விசிடியைப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். வீட்டில் இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் இணையதளங்களிலேயே படத்தைப் பார்த்து விடுகிறார்கள். இதனால் சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக திரையுலகினர் கவலைப்படுகிறார்கள்.
அதே சமயம் முன்னணி ஹீரோக்களின் படங்களைத் திருட்டு விசிடியாக தயார் செய்து கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்ற உண்மையும் உள்ளது. சமீபத்தில் அஞ்சான் படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த சூர்யா, 'சிங்கம் 2' படத்திற்காக 45 லட்சம் திருட்டு விசிடிக்களைத் தயார் செய்து விற்றுள்ளார்கள் என்ற அதிர்ச்சித் தகவலைத் தந்தார். ஒரு சிடியின் விலை சராசரியாக 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் சுமார் 9 கோடி ரூபாய். முன்னணி நட்சத்திரம் நடிக்கும் ஒரு படத்தின் பட்ஜெட்டில் ஏறக்குறைய நான்கில் ஒரு பங்கு இந்தத் தொகை. உண்மையிலேயே அந்தத் தொகை படத்தின் தயாரிப்பாளருக்கு வராமல் யார் யாருக்கோ போய்ச் சேருகிறது.
'திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் பாடிக் கொண்டிருப்பது.