ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மாஜி ஹீரோயின்கள் அம்பிகா, ராதாவின் ஒன்றுவிட்ட சகோதரியின் மகள் கவுரி நம்பியார் நடிக்கும் படம் வலியுடன் காதல். புதுமுகம் ராஜேஷ் ஹீரோவாக நடிக்கிறார். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜே.கே.செல்வா இசை அமைக்கிறார்.
நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. "கிராமத்தில் வெட்டியாக திரியும் இளைஞனுக்கு பக்கத்து ஊர் பணக்கார வீட்டு பெண் மீது காதல் வருகிறது. இந்த காதலுக்கு ஹீரோ ஏழை என்பதால் பிரச்னை வரும் என்று நினைத்தால் அது தவறு. வருவது வேறுவிதமான பிரச்னை. அதுதான் திரைக்கதை, கிளைமாக்சும் புதுமையாக இருக்கும். ஆடிசன் வைத்துதான் ஹீரோ, ஹீரோயினை தேர்வு செய்தோம். கவுரி நம்பியாரை தேர்வு செய்த பிறகுதான் அவர் ராதாவின் ஒன்றுவிட்ட சகோதரி மகள் என்பது தெரியவந்தது என்கிறார் இயக்குனர் சஞ்ஜீவன்.
"கார்த்திகா, துளசி இருவருமே என் கசின் சிஸ்டர்ஸ். நடிக்க வருதற்கு முன்பு எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மும்பையிலும், நாங்கள் கேரளாவிலும் வசிப்பதால் பெரும்பாலும் போனில்தான் பேசிக் கொள்வோம். குடும்ப விழாக்களில் நேரில் சந்தித்து கொள்வோம்" என்கிறார் கவுரி நம்பியார்.