Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேமராமேனை திரும்பத்திரும்ப கட்டிப்பிடித்து டைரக்டரை வெறுப்பேற்றிய மோனல் கஜ்ஜர்!

08 ஆக, 2014 - 12:14 IST
எழுத்தின் அளவு:

விக்ரம்பிரபு நடித்துள்ள சிகரம் தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மோனல் கஜ்ஜர். எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் இவர்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் அவருக்குப் பதிலாக சுரபி நடித்தார்.


இருப்பினும் அதையடுத்து விக்ரம்பிரபு கமிட்டான சிகரம் தொடு படத்தை கைப்பற்றி அவருடன் டூயட் பாடி விட்டார் மோனல் கஜ்ஜர். இந்த படத்தில் நடிப்பதற்கு அவருக்கு சிபாரிசு செய்தவர் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான விஜய் உலகநாத்தாம். அதையடுத்து, ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட மோனல், டைரக்டர் கெளரவை சந்திக்க வந்தபோது, அவருக்கு எதிரே கேமராமேன் விஜய் உலகநாத் இருப்பதைப் பார்த்ததும் டைரக்டருக்கு கைகுலுக்க வந்தவர், அதை நிறுத்தி விட்டு, விஜய் உலகநாத்தை மாறி மாறி கட்டிப்பிடித்தாராம்.


அதையடுத்து படப்பிடிப்பு நடந்தபோது, மோனல் கஜ்ஜர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது, மற்றவர்கள் சம்பந்தப்பட்ட சீனில் லைட்டிங்கை லைட்டாக பண்ணிய கேமராமேன், மோனல் நடித்த காட்சியில் ப்ரைட்டாக லைட்டிங் கொடுத்து அவரையும் ப்ரைட்டாக காண்பித்தாராம். அப்படி தன்னை ஒவ்வொரு காட்சியிலும் அவர் அழகாக காண்பிக்கும்போதும் அவரை கட்டிப்பிடித்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு வந்தாராம் மோனல்.


இதை சிகரம்தொடு படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்த டைரக்டர் கெளரவ், படம் தொடங்கியதில் இருந்தே கேமராமேன் விஜய் உலகநாத்தும், மோனல் கஜ்ஜரும் அடித்த லூட்டி என்னை மட்டுமிலலாமல் எல்லோரையுமே வெறுப்பேற்றி விட்டது. அந்த வகையில் டைரக்டரை மோனல் கண்டுகொள்ளவேயில்லை என்று ரொம்பவே பீல் பண்ணினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in