பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் |
வடிவேலு பல படங்களில் பேசிய பிரபலமான காமெடி டயலாக், 'கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா...' இதனை தற்போது மக்களும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த டயலாக்கையே டைட்டிலாக வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதுமுங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் அவர்களுடன் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமாரும், ஆர்.சுந்தர்ராஜனும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். முழு நீள காமெடி படமான இதை ரஜாக்கான் என்பவர் இயக்குகிறார். எம்.எஸ்.ஸ்ரீகாந்த் மியூசிக். உதயா, ஜெய்குமார், அருண் ஆகிய மூவரும் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
"காதலிக்க நேரமில்லை, உள்ளத்தை அள்ளித்தா, சபாஷ் மீனா பட வரிசையில் இது பக்கா காமெடி படம். அதனால் புகழ்பெற்ற காமெடி டயலாக்கை டைட்டிலாக வைத்திருக்கிறோம். கொடைக்கானல், கொல்லிமலை, செஞ்சிக்கோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது" என்கிறார் இயக்குனர் ரஜாக்கான்.