ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
விமல்-ப்ரியா ஆனந்த் நடித்து வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்தில் சூரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் முதன்முறையாக நடிகை லட்சுமிமேனன் ஒரு பாடல் பின்னணி பாடியுள்ளார். இதற்கு முன்பு, ஸ்ருதிஹாசன், ரம்யா நம்பீசன், சிவகார்த்திகேயன் என பல நடிகர்-நடிகைகளை பாட வைத்த இமான், இந்த படத்தில் லட்சுமி மேனனையும் பாட வைத்திருக்கிறார்.
இந்தநிலையில், அவர் பாடிய முதல் பாடலுக்கு வடகறி படத்தில் ஜெய்யுடன் குத்தாட்டமாடிய பாலிவுட் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் நடனமாடுவதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால், இப்போது அவர் ஆடுவதாக கூறப்பட்ட அந்த பாடலில் வாகை சூடவா நாயகி இனியா குத்தாட்டமாடுவதாக அப்பட டைரக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, கேரளாவில் தனது சகோதரியுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவர்தான் இனியா. அதனால் அவருக்கு இந்த பாடலில் நடனமாடுவது ஒன்றும் இமேஜை பாதிக்கக்கூடிய விசயமாக தெரியவில்லையாம். அதனால் தொடர்ந்து கதாநாயகி அல்லாத வேடங்கள், அயிட்டம் பாடலுக்கு ஆடுவது என்றாலும் நான் ஓகே என்று தொடை தட்டுகிறார் இனியா.
அவரிடத்தில் நீங்கள் ஜோடி சேர்ந்த விமல் நடிக்கும் படத்திலேயே குத்தாட்டமாடுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டால், விமலுடன் வாகை சூடவா படத்தில் நடித்தபோது எங்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்தது. அவர் என்னை விட சீனியர் நடிகர் என்பதால் சில டிப்ஸ்களை பெற்றும் நடித்தேன. தொடர்ந்து அவருடன் நடிக்க வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், சில படங்களின் தோல்வி எனது மார்க்கெட்டை சரித்து விட்டது. இருப்பினும், சினிமாவில் இதுபோன்ற மேடு பள்ளங்கள் வருவது இயல்பு. அதனால் இந்த படத்தில் விமலுடன் குத்தாட்டமாடினாலும், எதிர்காலத்தில் மீண்டும் அவருடன் டூயட் பாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்கிறார் இனியா.