ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். மிகவும் தேர்ந்தெடுத்து படங்கள் செய்யக்கூடியவர். மணிரத்தினத்துடன் இவர் பணியாற்றிய படங்கள் அனைத்தும் ஒளிப்பதிவிற்காக பேசப்பட்டவை. பால்கி இயக்கத்தில் பா, சீனிகம் படங்களில் பணியாற்றினார். இப்போது அமிதாப், அக்ஷராக ஹாசன், தனுஷ் நடிக்கும் ஷமிதாப் படத்தில் பணியாற்றி வருகிறார்.
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படங்கள் தவிர ஒரு இந்தி, மற்றும் ஒரு தமிழ் படத்தில் பணியாற்ற ஒப்பந்தமாகி இருக்கிறார். இரண்டுமே பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படம். இந்தப் படங்கள் முடிவதற்கு ஒரு வருடத்திற்கு மேலாகும். அதாவது வருகிற 2015 டிசம்பர் வரை பி.சி. ரொம்ப பிசி.