Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை ஜெனிலியா விரைவில் 'அம்மா' ஆகிறார்…!

08 ஜூன், 2014 - 15:10 IST
எழுத்தின் அளவு:

ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா. தொடர்ந்து விஜய்யுடன் 'சச்சின்', பரத்துடன் 'சென்னைக் காதல்', ஜெயம் ரவியுடன் 'சந்தோஷ் சுப்ரமணியம்', தனுஷுடன் 'உத்தம புத்திரன்', மீண்டும் விஜய்யுடன் 'வேலாயுதம்' ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். அதோடு, தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தார்.

அவருடைய துறுதுறு செய்கையாலும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தவர். மறைந்த முன்னாள் மகாராஷ்டிரா முதல் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012ம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஜெனிலியா கர்ப்பமடைந்திருப்பதாக அவரது கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் எத்தனையாவது மாதம் என்பது போன்ற எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. குழந்தை பிறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார். திருமணம் ஆன பின்னும், இந்த காதல் தம்பதியினர் பல பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகவே கலந்து கொள்வர். ஆனால், சமீப காலமாக அவர்களிருவரும் ஜோடியாக எந்த நிகழ்ச்சிக்கும் வராமலே இருந்தனர். இது பத்திரிகையார்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில்தான் ரித்தேஷும், ஜெனிலியா கர்ப்பமடைந்திருக்கும் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in