புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
ஒரு வழியாக கோச்சடையான் ரிலீசாவது 100 சதவிகிதம் உறுதியாகி இருக்கிறது. 5 முறை தள்ளி வைக்கப்பட்ட கோச்சடையான் இந்த முறை வருகிற வெள்ளிக்கிழமை (மே 9) ரிலீசாகிறது. தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களிலும், சென்னையில் மட்டும் 35 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது.
சென்னையில் சத்யம், சாந்தம், செரீன், எஸ்கேப் 1,2,3, ஐநாக்ஸ் 1,2,3, தேவி, தேவி பேரடைஸ், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, சாந்தி, ஆல்பட், அபிராமி 7 ஸ்டார், அன்னை அபிராமி, சொர்ண சக்தி அபிராமி, ரோபோ பால அபிராமி, பிவிஆர் 1,2,3, கமலா, கமலா ஸ்கிரீன் 2, எஸ்2 (பெரம்பூர்) 1,2,3, ஏவிஎம் ராஜேஸ்வரி, உதயம், சூரியன், சந்திரன், சைதை ராஜ், ஐட்ரீம், மகாராணி, பாரத் ஆகிய தியேட்டர்களில் ரிலீசாகிறது. எல்லா தியேட்டர்களிலும் 4 காட்சிகள் திரையிடப்படுகிறது. இதுதவிர பல தியேட்டர்கள் ரசிகர் மன்ற சிறப்பு காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
ரிலீசாகும் அனைத்து தியேட்டர்களிலும் இன்று முதல் முன்பதிவு தொடங்கியது, சத்யம், தேவி, அபிராமி, ஐ நாக்ஸ் போன்ற மால் தியேட்டர்களில் ரசிகர்கள் காலையிலேய குவிந்து முன்பதிவு செய்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோச்டையானின் தகவல் தொடர்பை ஏர்டெல் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்காக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சவுந்தர்யா ரஜினி பேசும்போது "கோச்டையான் ரிலீசுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளது. என்னுடைய முதல் திரைப்படமான இதில் புதுமையான விஷயங்களை நிறைய கொடுத்திருக்கிறேன். நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அப்பாவின் ரசிகை, ஒரு இயக்குனர், ரஜினியின் மகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகிழ்ச்சியான தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.