ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெற்றி மகாலிங்கம். தற்போது வெண்ணிலா வீடு என்ற படத்தை இயக்கி வருகிறார். செந்தில், விஜயலட்சுமி நடித்துள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் படம் ரிலீசாக இருக்கிறது. படத்தை பற்றிய முன்னோட்டத்தை தருகிறார் வெற்றி மகாலிங்கம்
"கிராம மக்கள் நகர்புறத்து மக்கள் என்று இரண்டு வகையாக பிரித்து பார்க்கிறோம், இதில் மூன்றாவது ஒரு வகை இருக்கிறது. அது கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடியேறிய மக்கள். சொந்த கிராமத்தை மறக்க முடியாமலும் புதிய நகர்புறத்து வாழ்க்கையடு இணைந்து கொள்ள முடியாமலும் அவர்கள் படுகிற அவஸ்தையை பற்றி ஆயிரம் படம் எடுக்கலாம். அப்படி வருகிற ஒரு பெண்தான் படத்தின் ஹீரோயின் விஜயலட்சுமி.
ஆண்களின் மண் மோகம், பெண்களின் பொன் மோகம் எந்த அளவுக்கு சமுதாய சிக்கல்களை உருவாக்கி விடுகிறது என்பதையும் சொல்லுகிறது படம். பகட்டுக்காக அடுத்த வீட்டு பெண்ணின் நகையை இரவல் வாங்கி சென்று அதனை தொலத்துவிட்டு வந்து நிற்கிற நிலைமை இருக்கிறதே அதுதான் ரொம்ப கொடுமையானது. அந்த வேதனையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதே வலியோடு அதனை பதிவு செய்திருக்கிறேன். படத்தை பார்க்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் நகைகள் மீதிருக்கிற மோகம் போய்விடும். அதனால் கட்டாயம் பெண்களை படம் பார்க்க வையுங்க ஆண்களேன்னு கேட்கப்போறேன்" என்கிறார்.