ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
கன்னடத்தை, தாய் மொழியாகக் கொண்ட அனுஷ்கா, தெலுங்கு சினிமாவில் தான் நடிகையாக அறிமுகமானார். கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் மட்டும், 40 படங்கள் வரை நடித்து விட்ட அனுஷ்கா, இதுவரை எந்த மொழியிலும், தனக்குத்தானே 'டப்பிங்' பேசியதில்லை. ஆனால், முதன் முறையாக அஜீத்தின், 55-வது படத்தில் நடிக்கும், அவர் தமிழில் 'டப்பிங்' பேச உள்ளார். இதையடுத்து, படப்பிடிப்பு முடிவதற்குள், நன்றாக தமிழ் பேச பயிற்சி எடுக்கும்படி, அனுஷ்காவை கேட்டுக் கொண்டுள்ளார் படத்தின் இயக்குனர். அதனால், இதுவரை ஓரிரு தமிழ் வார்த்தை பேசவே, மறுத்து வந்த அனுஷ்கா, இப்போது தனக்குத் தெரிந்த தமிழை, யூனிட் நபர்களிடமும் பேசி வருகிறார். குழந்தைகள் படிக்கும் சிறிய கையேட்டை வாங்கி, 'அம்மா, ஆடு, இலை, ஈ...' என, சத்தம் போட்டு படித்து, தீவிர பயிற்சி எடுத்து வருகிறார்.