பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ |
வீரம் படத்திற்கு பிறகு அஜீத், கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். இதனை ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கிறார். பெரும் கடனில் சிக்கி இருக்கும் இயக்குனர் கவுதம் வாசுதேவனுக்கும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திற்கும் உதவுவதற்காக அஜீத் நடித்துக் கொடுக்கும் படம். இது இதுவரை வெளியான தகவல்கள். இனி படம் பற்றிய அதிகாரபூர்வமான முதல் தகவல் அறிக்கை.
* படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அஜீத்தின் கேரக்டர் பெயரே தலைப்பாக வரப்போகிறது. ஆயிரம் தோட்டாக்கள், துடிக்குது புஜம் என்ற தலைப்புகளும் பரிசீலனையில் இருக்கிறது. 50 சதவிகித படப்படிப்பு முடிந்த பிறகுதான் படத்தின் டைட்டில் தீர்மானிக்கப்படும்.
* பெண்களை கவரும் வகையிலான உணர்ச்சி பூர்வமான கதை. பொதுவாக கவுதம் மேனன் படங்களில் பெண்களை கவரும் விஷயங்கள் குறைவாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பெண்களை கவரும் விஷயங்கள் அதிகம் இருக்கும். எமோஷலான ஆக்ஷன் படமாக உருவாகிறது.
* அனுஷ்கா படத்தின் ஹீரோயின். 30 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதுவரை இல்லாத மாதிரி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார் அனுஷ்கா. அஜீத்திற்கு சமமான பவர்புல் கேரக்டர். அனுஷ்கா, அஜீத் காதல் எபிசோட் பவர்புல்லாக இருக்கும்.
* சிறிய இடைவெளிக்கு பிறகு கவுதம் மேனன் படத்திற்கு இசை அமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இருவரும் இணைந்து பணியாற்றிய அத்தனை படங்களின் பாடல்களும் ஹிட். சின்ன கருத்து வேறுபாட்டில் பிரிந்திருந்தவர்கள் இதில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
* படத்தில் நிறைய பன்ஞ் டயலாக்குகள் இருக்கிறது. அதனை கவுதம் மேனனே எழுதியிருக்கிறார். "உலகத்துலயே ரொம்ப அழகான ஒருத்தன்" என்ற பன்ஞ் டயலாக்கை மற்றவர்கள் அஜீத்தை பற்றி குறிப்பிடும்போது சொல்வார்கள். "நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடப்போகுது. எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா" இது அஜீத் வில்லனை பற்றி சொல்லும் பன்ஞ் டயலாக். இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு.
* இந்தப் படத்தின் கதை, சூர்யாவுக்கு எழுதப்பட்ட துருவ நட்சத்திரம் கதையோ. அஜீத்துக்கு கவுதம் ஏற்கெனவே எழுதிய துப்பறியும் ஆனந்த் கதையோ அல்ல. முற்றிலும் புதிய கதை.
படம் பற்றிய சின்ன முன்னோட்டம் இது. பர்ஸ்ட் லுக் படங்களை பார்க்க மேலும் படங்கள் கிளிக் செய்யவும்.