ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை சுனேனா நடித்து வரும் புதிய படமான கதிர்வேல் படத்தின் சூட்டிங்கை பார்க்க வந்த ரசிகர்கள் துணைநடிகையின் கையை பிடித்து இழுத்து கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை சுனேனா, நடிகர் அஜ்மலுடன் ஜோடி சேரும் படம் கதிர்வேல். வி.செந்தில்குமார் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நடந்தது. படத்தில் இடம்பெறும் குத்துப்பாட்டு ஒன்றிற்கு மும்பை மாடல் தஷ்கவுசிக் நடனம் ஆடினார். தமிழ்நாட்டு குதிர... என்னை அடக்க யாரு எதிர... எனத் தொடங்கி தொடரும் அந்த பாடலில் தஷ்கவுசிக்குடன் ஏராளமான துணை நடிகைகளும் கவர்ச்சி குத்தாட்டம் போட்டனர்.
அப்போது சூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர் உணர்ச்சிவசப் பட்டு துணை நடிகைகளில் கையை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டைரக்டர் வெங்கட், போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சூட்டிங் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்து கூட்டத்தினரை தடியடி நடத்தி கலைத்தனர். அதன் பிறகு சூட்டிங் தொடர்ந்து நடந்தது.