சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
சம்பளத்தை படத்துக்குப்படம் உயர்த்திக்கொண்டே போவது ஒரு பாணி. ஆனால், தேவைப்படும்போது ஏறி இறங்குவது தொழில் ரகசியம். அந்த வகையில், தற்போது தனது தொழில் ரகசியத்தை காண்பித்திருக்கிறார் சூரி. தற்போதைய நிலவரப்படி அவரது காமெடி மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, நிமிர்ந்து நில் படங்களை அடுத்து, அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். இதற்கிடையே கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்திருக்கும் அவர், சில படங்களில் விமல் போன்ற நடிகர்களுக்கு இணையான வேடத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகனாகி இருப்பதோடு, அவர் காமெடியனாக நடிக்கவும் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதால், ஒரே படத்தில் இரண்டு ஹீரோக்களுக்கான சம்பளம கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று சலித்துக்கொண்ட படாதிபதிகள் இப்போது சூரி பக்கம் திரும்பியிருக்கின்றனர்.
இதை புரிந்து கொண்ட சூரி, இதுதான் தருணம் என்று படக்கூலியை தடாலடியாக உயர்த்தாமல், மிகக்குறைவாக பேசி, படங்களை கைப்பற்றி வருகிறார். இந்த விசயம் கோலிவுட்டில் பரவியதை அடுத்து, மேலும் பல படங்கள் சூரியை நோக்கி வரிசை கட்டி உள்ளன.