ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ முன்னாள் முதல்வரும், தி.மு.க நிறுவனருமான அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றை அறிஞர் அண்ணா என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்க இருக்கிறார்கள். திராவிடன் மனமகிழ்வுகள் என்ற புதிய நிறுவனமும், அண்ணா பேரவையும் இணைந்து இதனை தயாரிக்கிறது. வேள் கதிரவன் என்பவர் இயக்குகிறார். இசைக்கினியன் இசை அமைக்கிறார். கண்ணியப்பன் ஒளிப்பதிவு செய்கிறார்.
அண்ணா துரையின் வளர்ப்பு மகன் டாக்டர்.அண்ணா பரிமளம், பேரன் மலர்வண்ணன் பரிமளம் கதை, வசனம் எழுதியுள்ளனர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி, பெரியார், காமராஜர், ராஜாஜி, மதியழகன், சம்பத் உள்ளிட்ட முக்கிய கேரக்டர்களில் நடிப்பதற்கு அவர்களின் முகச் சாயல் கொண்டவர்களை தேடி வருகிறார்கள். அண்ணாதுரை மற்றும் கருணாநிதி கேரக்டரில் நடிப்பவர்கள் மட்டும் முடிவாகி இருக்கிறது. அவர்களை கொண்டு முதல்கட்ட படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.