இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
ஏழாம் அறிவு, 3 படங்களுக்கு பின், தமிழில் நடிக்காத போதும், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். முன்னணி நடிகைகளுக்கே, சவால் விடும் அளவுக்கு, பாலிவுட்டில் ஸ்ருதியின் வளர்ச்சி இருப்பதால், தமிழ் படங்களில் அவர்
ஆர்வம் காட்டவில்லை. இதுகுறித்து, ஸ்ருதியை நோக்கி கேள்விகள் எழுந்தபோது, தமிழில் நிறைய படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. ஆனால், நேரம்தான் இல்லை என, விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக, மலையாளத்தில், ஒரு புதிய படத்தில் நடிக்க, ஸ்ருதியுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரைக்கும் அவர் சாதகமான பதிலை சொல்ல வில்லையாம். இருப்பினும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால், கட்டாயம் ஸ்ருதி கால்ஷீட் தருவார்என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.