ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முதுபெரும் பத்திரிக்கையாளர் மேஜர்தாசன் தலைவராகக் கொண்டு, சினிமா பத்திரிக்கையாளர் சங்கம் சமீபத்தில் துவங்கப்பட்டது. இந்த சங்கத்தின் இணையதள துவக்கவிழா 4 பிரேம்ஸில் நடைபெற்றது. இவ்விழாவில், தினமலர் துணை ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு அவர்கள் இணையதளத்தை துவக்கி வைத்தார். நடிகை சிம்ரன், சினிமா பகுதியினை துவக்கி வைத்தார். இவ்விழாவில் நடிகர் பாக்யராஜ் அவர்களுக்கு, சங்க உறுப்பினர் அட்டையை, திரு. கிருஷ்ணமூர்த்தி, ராமசுப்பு (தினமலர் துணை ஆசிரியர்) அவர்களால் வழங்கப்பட்டது. விழாவில் சங்கத்தின் வளர்ச்சிக்காக, சிறப்பு விருந்தினர்கள் ஆலோசனைகளை வழங்கியது மட்டுமன்றி, சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு, தாம் எப்போதும் உறுதுணையாக இருப்பதாக உறுதி அளித்தனர். விழாவில் பொருளாளர் பாலேஷ்வர், மற்றும் செயலாளர் கிருஷ்ணன் குட்டி மற்றும் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.