ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அனுஷ்கா நடித்து வரும், பாகுபாலி என்ற படம், 10ம் நூற்றாண்டை சேர்ந்த சரித்திர கதையை மையமாக வைத்து உருவாகிறது. இந்த படம், மூன்று ஆண்டுகளுக்கு பின் தான், திரைக்கு வருமாம். அந்த அளவுக்கு, 10ம் நூற்றாண்டு மனிதர்களையும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையினையும் தத்ரூபமாக செட் அமைத்து படமாக்கி வருகின்றனர். இந்த படத்தில், தனக்கு தான் முக்கிய வேடம் என்பதால், இதை ரொம்பவே எதிர்பார்த்துள்ளார், அனுஷ்கா. இந்நிலையில், இந்த படத்தின் கதை வன்முறையை மையமாக வைத்து உருவாகிறது. அதனால், பாகுபாலி என்ற புனித பெயரை படத்தின் தலைப்பாக வைக்கக் கூடாது என்று கர்நாடகாவைச் சேர்ந்த ஜெயின்அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் தடை கோரியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள அனுஷ்கா, இந்த படத்தில், ரொம்பவே
சிரமப்பட்டு நடித்துள்ளோம். இப்போதுஏற்பட்டுள்ள எதிர்ப்பால், படம், திரைக்கு வராமல்
போய் விடுமோ என, பதற்றத்தில்உள்ளோம் என்கிறார்.