ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தலைப்பை பார்த்துட்டு அதிர்ச்சியடையாதீங்க. இதுவும் சினிமா நியூஸ்தான். நெடுஞ்சாலை என்கிற திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா அதற்கு பிறகு ஏன் இப்படி மயங்கினாய் என்ற படத்தை இயக்கினார். இதில்தான் அவர் காயத்ரியை அறிமுகப்படுத்தினார். அந்த படம் பாதியில் நின்றுவிட்டது. அதற்கு பிறகு அவர் டைரக்ட் செய்துள்ள படம்தான் நெடுஞ்சாலை. திறமை இருந்தும் வாய்ப்புகள் அமையாத ஆரி ஹீரோ. நியூபேஸ் ஷிவதா ஹீரோயின்.
நெடுஞ்சாலையோரம் வாழும் மக்களின் கதை. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் பயணிக்கும் கதை. இந்தியாவின் மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் படமாக்கப்பட்டுள்ளது. சினிமாவின் டெக்னிக்கல் ஏரியாவில் பெரிதாக பேசப்படும் இந்தப் படத்தை சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்த்தார். அவருக்கு படம் பிடித்துப்போகவே படத்தை வாங்கிவிட்டார். பொங்கல் பரபரப்புகள் அடங்கிய பிறகு ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.